ரஷ்யா மீது நான்காவது கட்ட பொருளாதாரத் தடைகள் அறிவித்து ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

by Admin / 12-03-2022 02:49:22pm
 ரஷ்யா மீது நான்காவது கட்ட பொருளாதாரத் தடைகள் அறிவித்து ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

ரஷ்யாவுக்கு சர்வதேச சந்தையில் வழங்கப்பட்ட வர்த்தகத்திற்கான தனிச் சலுகைகள் உள்ளிட்டவைகளை தடை செய்ய உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மட்டும் ஜி-7 நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது நான்காவது கட்ட பொருளாதார தடைகள் அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு ஆடம்பரப் பொருள்களை ஏற்றுமதி செய்ய தடை கிரிப்டோ  சொத்துக்களை பயன்படுத்த கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பிரான்சில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்மேக்ரன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஆகியோர் தெரிவித்தனர்.

இதன் மூலம் ரஷ்யாவின் முதலீடு தொழில்நுட்ப பகிர்வு நீதிச்சேவை எரிசக்தி சப்பளை உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 

 

Tags :

Share via