காற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த பரிந்துரைகளை வெளியிட்டது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

by Editor / 09-11-2021 03:08:01pm
காற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த பரிந்துரைகளை வெளியிட்டது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சில பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மிக மோசம் என்ற நிலையிலேயே நீடித்து வருகிறது. ஆண்டு தோறும் குளிர் காலங்களில் மக்கள் காற்று மாசால் மிகுந்த அவதிக்குள்ளாகி வரும் நிலையில் காற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சில பரிந்துறைகளை வெளியிட்டுள்ளது.
 
அதன்படி இயந்திரங்களை கொண்டு சாலையை சுத்தம் செய்வது, காற்றில் தூசி கலக்காமல் இருக்க சாலைகளில் தண்ணீர் தெளிப்பது, அனைத்து செங்கல் சூளைகளும் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்தல், இயற்கை எரிவாயு அடிப்படையிலான ஆலைகளில் இருந்து அதிக மின்சாரம் உற்பத்தி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

 

Tags :

Share via