மதுரை அழகர் கோயிலில் சுந்தராஜபெருமாள் கோலாகல திருக்கல்யாணம்

by Editor / 18-03-2022 11:46:16am
மதுரை அழகர் கோயிலில் சுந்தராஜபெருமாள் கோலாகல திருக்கல்யாணம்

மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோவில் உலக பிரசித்திபெற்றவைகளில் ஒன்று. இக்கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.

சுந்தரராஜ பெருமாளுக்கும் ஸ்ரீ தேவி, பூதேவி ஸ்ரீகல்யாண சுந்தரவல்லி தாயார், ஸ்ரீஆண்டாள் ஆகிய நான்கு பிராட்டிமார்களுக்கும் திருக்கல்யாண வைபவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெறுகிறது

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண  வைபவ திருவிழாவும் சிறப்பான ஒன்றாகும்.

இந்த விழா 15-ம் தேதி மிதுன லக்னத்தில் பங்குனி திருவிழாவின்  திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம் ஆனது. அன்றைய தினம் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் சேவை சாதித்தல், சிறப்பு தீபாராதனை  நடைபெற்றது.. 

தொடர்ந்து 2-ம் நாள் 3-ம் நாள் திருவிழாவில் சேனை சார்த்தல், திருக்கல்யான  மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடை. பெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது.
திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத, கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். 

பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள பட்டர்களின் வேத மந்திரம் முழங்க பூணுல் மாற்றப்பட்டது. தொடந்து 
ஸ்ரீ தேவி, பூதேவி ஸ்ரீகல்யாண சுந்தரவல்லி தாயார், ஸ்ரீஆண்டாள் ஆகிய நான்கு பிராட்டிமார்களுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும், மதுரையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருத்தல்யாணம் முடிந்ததும் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் பிரசாதம் வந்திருந்த தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

Tags :

Share via