புதிய இரட்டை ரெயில்வே பாதை - கோவில்பட்டி - சாத்தூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

by Editor / 22-03-2022 12:49:44pm
புதிய இரட்டை  ரெயில்வே பாதை - கோவில்பட்டி - சாத்தூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே  பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி -துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை அகல ரயில் பாதையில், 33 கிலோமீட்டர் தூரம் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தலைமையிலான குழுவினர் 8 மோட்டார் டிராலியில் ஆய்வு பணி செய்தனர். கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் இருந்து மேளதாளம் முழங்க பூஜைகளுடன் ஆய்வு பணி தொடங்கியது.


தென் தமிழகத்தில் அதிவேக ரயில்களை இயக்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரை தூத்துக்குடி இடையிலான 160 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ 11822 கோடி மதிப்பில் புதிதாக இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியாக முடியும்போது முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வாஞ்சி மணியாச்சி- தட்டப்பாறை , வாஞ்சி மணியாட்சி - கங்கைகொண்டான் , வாஞ்சி மணியாட்சி - கடம்பூர் , கோவில்பட்டி - கடம்பூர் இடையே பணிகள் முடிவுற்று ஆய்வு செய்யப்பட்டு ரயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதற்கு அடுத்தபடியாக கோவில்பட்டி முதல் துலுக்கப்பட்டி வரையிலான 33 கிலோமீட்டர் தொலைவிற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அந்தப் பணிகளை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் மேளதாளம் முழங்க பூஜைகளுடன் ஆய்வு பணி தொடங்கியது. முதலில் கோவில்பட்டியிலிருந்து சாத்தூர் ரயில்வே நிலையம் வரையிலான முடிவுற்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தலைமையிலான குழுவினர் 8 மோட்டார் டிராலி வண்டியில் சென்று ஆய்வு செய்தனர். சிறிய, பெரிய பாலங்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே கேட்டுகள், புதிய இரட்டை ரயில் பாதை வலது மற்றும் இடது பக்க வளைவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட்டது. மதியம் சாத்தூர் முதல் கோவில்பட்டி ரயில்வே நிலையம் வரை ரயில்வே சோதனை ஓட்டமும், மாலையில் சாத்தூர் முதல் துலுக்கப்பட்டி வரையும் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது. ஆய்வில் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட இயக்குனர் கமலாகர ரெட்டி, ரயில்வே கட்டுமான முதன்மை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்

 

Tags : Safety Commissioner inspects new double track railway line between Kovilpatti and Sattur railway stations

Share via