கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கியது மத்திய அரசு

by Writer / 24-03-2022 09:51:04am
கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கியது மத்திய அரசு



2020 ஆண்டு உலக முழுதும் கொரோனா பெருந்தொற்று  மக்களை மிகவும் பாதித்தது.கொத்துக்கொத்தாக மக்கள் இறந்தனர்.பொருளாதாரம் கடும் வீழச்சியடைந்தது. உற்பத்தி முடங்கியது.வாழ்வாதாரம் கேள்விக் குறியானது. வீட்டுக்குள்ளே முடங்கிய மக்கள் .எந்த நேரத்தில் யார் மரணிப்பர் என்று சொல்ல முடியாத சூழல். வல்லரசுகள் கூட இத்தொற்றிலிருந்து மீண்டு வரமுடியாமல் திணறின.,திணறிக் கொண்டிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளாக இந்தியாவும் கடும் போராட்டத்திற்கு பின் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டது. நாலாவது அலை வருகிறது என்று பயம் கொண்ட நிலையில் மத்திய அரசு முழுவதுமாக  கட்டுப்பாட்டைமாா்ச்31 விலக்கிக்கொள்ள மாநில அரசுகளுக்குத்தகவல்அனுப்பியதாக த்தகவல்..இந்திய வான்வெளி போககுவரத்துத்துறையும் இரண்டாண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கியதோடு நூறு விழுக்காடு பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி அளித்துள்ளது. இருப்பினும்,இந்திய உள்துறை அமைச்சகம் மக்கள் முகக்கவசம் அணிவது,சமூக இடைவெளியை கடைபிடித்தல்,கைகளை கிருமி நாசினி கொண்டூ சுத்தப்படுத்துதல் போன்ற நடைமுறைகளை மக்கள் முழுமையாக பின் பற்ற வலியுறுத்துமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டதுகுறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via