இன்று முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

by Staff / 24-03-2022 11:17:57am
 இன்று முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தனியார் பஸ்களின் வேலைநிறுத்த போராட்டதை தொடர்ந்து முக்கிய வழித்தடங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. என்றாலும் பல இடங்களில் பொதுமக்கள் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

கேரளாவில் இன்று முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
வேலை நிறுத்தம் காரணமாக இயக்கப்படாத தனியார் பஸ்கள்.
திருவனந்தபுரம்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து தனியார் பஸ்களின் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.12 ஆக உயர்த்த வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக மாநில போக்குவரத்து துறை மந்திரி ஆன்டனி ராஜிடமும் மனு கொடுத்தனர். பஸ் உரிமையாளர்களின் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து கேரளா முழுவதும் தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்று காலை முதல் மாநிலம் முழுக்க தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.

இதனால் இன்று காலையில் அலுவலகம் செல்வோர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

தனியார் பஸ்களின் வேலைநிறுத்த போராட்டதை தொடர்ந்து முக்கிய வழித்தடங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. என்றாலும் பல இடங்களில் பொதுமக்கள் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

போராட்டம் தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, கேரளாவில் தனியார் பஸ்களின் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.12 ஆக உயர்த்த வேண்டும், மாணவர்கள் பயணம் செய்வதற்கான கட்டணத்தை ரூ.6 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறியிருந்தோம்.

4 மாதங்கள் ஆகியும் இதற்கு முடிவு கூறப்படவில்லை. மேலும் கொரோனா காலத்திற்கான வாகன வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு முடிவு தெரிந்த பின்னரே வேலை நிறுத்தத்தை கை விடுவோம் என்றனர்.

 

Tags :

Share via