புயலால் மும்பையில் காணாமல் போன 182 பேர் மீட்பு

by Editor / 18-05-2021 07:22:37pm
புயலால் மும்பையில் காணாமல் போன 182 பேர் மீட்பு



அரபிக் கடலில் உருவான 'டவ்-தே' புயலால் மும்பையில் காணாமல் போனவர்களில் 182 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகிய டவ்-தே, அதிதீவிர புயலாக மாறியது. புயல் காரணமாக கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களிலும் டாமன்-டையு மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் கனமழையும் பலத்த காற்றும் வீசியது.
நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய டவ்-தே புயல், குஜராத்தில் உள்ள பாவ்நகா் மாவட்டத்தின் போா்பந்தா்-மஹுவா பகுதிகளுக்கு இடையே திங்கள்கிழமை இரவு 8 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 165 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியது. மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழையும் உள்பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.இந்த புயலால் மும்பை கடலோர பகுதிகளில் காணாமல் போன 261 பேரில் 182 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via