அ.தி.மு.க.ஆர்பாட்டம் அறிவிப்பு

by Admin / 03-04-2022 11:41:43pm
அ.தி.மு.க.ஆர்பாட்டம் அறிவிப்பு


தமிழ் நாட்டில் மாகராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் மாவட்டத்தலைநகரில் ஆர்பாட்டம் நடத்தயிருப்பதாக அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர்ஓ.பன்னீர்செல்வம்,இணை
 எடப்பாடி கே.பழனிச்சாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை...பொழுது விடிந்து ,பொழுது போனால் தி.மு.க அரசு மக்களை துன்புறுத்தும் செயல்கள் எதையேனும் செய்து கொண்டே இருக்கிறது."விடியல் அரசு"என்று பெயர்சூட்டிக்கொண்டு,ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் இருள் சூழ்ந்த ஆட்சி மக்கள் மீது சுமைகளை ஏற்றிக்கொண்டே செல்கிறது.எத்தனை பொருளாதார நெருக்கடிகள் வந்தபோதும் அ.தி.மு.க.அரசு ஏழை,எளிய,உழைக்கும் மக்களின்  காப்பாற்றவும்,அவர்களை சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவும் மேற்கொண்ட திட்டங்கள் ஏராளம்.அந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தி.மு.க.அரசு சீர்குலைத்து வருகிறது.எடுத்துக்காட்டாக,தாலிக்கு தங்கம்,அம்மா மினி கிளினிக் போன்ற புரட்சிகரமான திட்டங்களை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல்,மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் சொத்து வரி உயர்வு போன்ற கடுமையான நடவடிக்கைகளை,மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு தி.மு.க.அரசு மேற்கொண்டிருக்கிறது.சட்டமன்ற பொதுத்தேர்தலின்போதுகொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வரை தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்று
தனது தேர்தல் அறிக்கையில்487-வது வாக்குறுதியாக மக்களுக்கு உறுதி அளித்த தி.மு.க.கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மக்கள் மீள முடியாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,150சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தியிருப்பது,வாக்களித்த மக்களுக்கு செய்கிற பச்சை துரோகம் ஆகும்.கொரோனா பாதிப்பு,விலைவாசி உயர்வு,வேலை இழப்பு,வருமானம் குறைவு என்று பன்முனை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படும நகர்புற மக்களின் தலையில்150சதவீத சொத்து வரி என்ற சம்மட்டியால் அடித்து,மக்களை நிலைகுலைய செய்திருக்கிறது.தி.மு.க.அரசு .தேர்தல்  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு,சொத்து வரியை உயர்த்திஇருக்கும் தி.மு.க.அரசை கண்டித்தும்,மக்கள் நலனை கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெறவலியுறுத்தியும்,அ.தி.முக. சார்பில் வருகிற5-ந்தேதி காலை 10 மணியளவில்,வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும்என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

 

Tags :

Share via