நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

by Admin / 14-04-2022 12:32:36am
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை


கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத்திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையை உடைத்துத்தகர்த்து,கனிம வளங்களைக்கொள்ளையடித்து கேரளாவுக்குக்கடத்தும் கொடுஞ்செயலுக்கு எதிராகப்போராடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குத்தொடர்ந்து அடக்குமுறை ஏவும் தி.மு.க.அரசின் வன்மையாகக்கண்டிக்கிறேன். முன்னதாக,கனிம வளக்கொள்ளையை தடுக்கப்போராடிய போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தம்பி சுஜினைக்கொடூரமாகத்தாக்கியக்காவல் துறையினர் தற்பொழுது கனிம வளக்கற்களைக் கொண்டு சென்ற பார உந்துகள் குறித்து புகார் தெரிவித்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 10 பேர் மீது வழக்குத்தொடுத்திருப்பது
ஏற்கவே முடியாத அட்டூழியமாகும்.
600க்கும் மேற்பட்ட வண்டிகள் கனிம வளக்கடத்தல் நடக்கிறது.தொடர்வள வேட்டையிலன் விளைவாக,குவாரிகள்
 ருகேயுள்ள வீட்டுச்சுவர்களில் கீறல்கள் விழுந்துள்ளதோடு,சுற்றியுள்ள பசுமை வளங்கள்அனைத்தின்மேல் தூசியும் ,மாசும் படர்ந்து சூழலியல் மண்டலமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இத்தோடு ,ஆஸ்துமா,ஒவ்வாமை போன்ற நோய்களாலும்,அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே,கேரளவுக்குக்கனிம வளங்கள் கடத்தப்படும் கொடுந்செயலை விரைந்து தடுத்து நிறுத்த வேண்டுமெனவும்,வனக் கொள்ளைகளை சட்டத்தின் துணையுடன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமெனவும்,நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத்திரும்ப பெற வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக்கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via