ஏப்ரல் 14-முக்கிய நிகழ்வுகள் :-

by Editor / 14-04-2022 09:20:48am
ஏப்ரல் 14-முக்கிய நிகழ்வுகள் :-

1963-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி இந்திய மதகுரு ராகுல் சாங்கிருத்யாயன் மறைந்தார்.

1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி மறைந்தார்.

 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியப் பொறியியலாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா மறைந்தார்.

*உலக சித்தர்கள் தினம்.

உலக சித்தர்கள் தினம் ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2009-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டது.

 சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும்,சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


*தேசிய தீயணைப்பு சேவை தினம்.

 பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும்,பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


*தீத்தடுப்பு தினம்.

தீ விபத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம், காயமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.ஆகவே தீ ஏற்பட்டால் அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீத்தடுப்பு தினம் ஏப்ரல் 14-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

 

Tags :

Share via