தென்மலை - எடமன் ரயில்பாதையில் யானைகள் நடமாட்டம்.

by Editor / 15-04-2022 09:51:01pm
தென்மலை - எடமன்  ரயில்பாதையில் யானைகள் நடமாட்டம்.

பாலக்காடு - திருநெல்வேலி விரைவு ரயில் (16792) புனலூர், செங்கோட்டை வழியாக மலை சார்ந்த வனப்பகுதிக்குள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த வியாழக்கிழமை அன்று அதிகாலை 01.10 மணிக்கு தென்மலை - எடமன்  ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து  ரயில் பாதையில் ரயிலுக்கு முன்பு  ஒரு யானையை ஓடிக்கொண்டிருந்தது. உடனடியாக இதை கவனித்த ரயில் இன்ஜின் ஓட்டுநர்  அவசரமாக அவசர  பிரேக்கை பிடித்து ரயிலை நிறுத்தினார். பின்பு அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. மேலும் இரவு நேரத்தில் அந்தப் பகுதிவழியாக திருநெல்வேலி - பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16791) மற்றும் சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) ஆகியவை இயக்கப்பட்டு  இருந்த நிலையில் இந்த ரயில்களின் இன்ஜின் டிரைவர்களுக்குஅந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டம் காரணமாக ரயில்களை மெதுவாக கவனித்து செல்லும்படி ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

 

Tags :

Share via