நாகூர் தர்க்கா எட்டு பேர் கொண்ட அறங்காவலர் குழுவிடம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு,நீதிபதிகள் உத்திரவு

by Admin / 16-04-2022 09:11:50pm
நாகூர் தர்க்கா எட்டு பேர் கொண்ட அறங்காவலர் குழுவிடம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு,நீதிபதிகள் உத்திரவு

1946 ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம பிறப்பித்த உத்தரவு மூலம் நாகூர் தர்க்கா நிர்வாகத்தைக்கவனிக்க ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழுவை சென்னை உயர்நீதி மன்றம் 2017ஆம் ஆண்டு நிர்வகிக்க நியமித்தது.இந்நிலையில்,ஜனவரி மாதம் 4-முதல் 17 ம்தேதி வரை 465 உருமஸ் விழாவில்
பங்கேற்க அனுமதி வேண்டி முஹாலி மூத்தவல்லியால் சென்னை உயர்நீதி மன்றத்தில்வழக்குத்தொடரப்பட்டது.
இதை பரிசீலிக்க  வக்பு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.இதனை எதிர்த்து தர்கா நிர்வாகம் மேல் முறையீடு செய்தது.இவ்வழக்கின் பொழுது நீதிபதிகள் தர்க்கா நிரவாகத்தை நிர்வகிக்கநான்கு மாத தற்காலிக நிர்வாகக்குழு இன்னும் ஏன் நான்காண்டு ஆகியும் தொடர்கிறது என்ற கேள்வி  எழுப்ப ,தற்காலிக நிர்வாகம்,நிர்வாகத்தை அறங்காவர் குழு நடத்தலாம் என்று தெரிவிக்க,நீதிபதிகள் எட்டு பேர் கொண்ட அறங்காவலர் குழுவிடம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு உத்திரவிட்டனர்.

 

Tags :

Share via