பாகிஸ்தானில் 18 மணிநேரம் மின்தடை

by Staff / 30-04-2022 01:11:03pm
பாகிஸ்தானில்  18 மணிநேரம் மின்தடை

பாகிஸ்தானில் கடும் வெப்பத்திற்கு மத்தியில் மின் பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில் 18 மணி நேர மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். எரிபொருள் நிலக்கரிமற்றும் எரிவாயு தட்டுப்பாடு தேவை மற்றும் சப்ளையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலால் அனல்மின் நிலையங்களில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனால் நகர்ப்புறங்களில் 6 முதல் 10 மணி நேரம் மின் தடையும் கிராமப்புறங்களில் 18 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மின்தடையால் தொழில் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முடக்கும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

 

Tags :

Share via