(06-02-2022) ராசி பலன்கள்

by Admin / 06-02-2022 04:54:01pm
(06-02-2022) ராசி பலன்கள்

மேஷம்
பிப்ரவரி 06, 2022

வியாபார பணிகளில் வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்த செயலையும் மேற்கொள்வீர்கள். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.  ஆசைகள் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்


அஸ்வினி : அலைச்சல் அதிகரிக்கும்.

பரணி : சிந்தித்து செயல்படவும். 

கிருத்திகை : வெற்றிகரமான நாள்.
---------------------------------------


ரிஷபம்
பிப்ரவரி 06, 2022

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும்.  ஆரோக்கியம் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 


கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும். 

ரோகிணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

மிருகசீரிஷம் : லாபம் மேம்படும். 
---------------------------------------


மிதுனம்
பிப்ரவரி 06, 2022

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.  அறிமுகம் கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------


கடகம்
பிப்ரவரி 06, 2022

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அவரவர்களின் முயற்சிக்கு ஏற்ப பதவி உயர்வு உண்டாகும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள்.  அமைதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


புனர்பூசம் : உயர்வான நாள். 

பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆயில்யம் : தன்னம்பிக்கையான நாள்.
---------------------------------------


சிம்மம்
பிப்ரவரி 06, 2022

மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.  செல்வாக்கு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


மகம் : கவனம் வேண்டும்.

பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------


கன்னி
பிப்ரவரி 06, 2022

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  அன்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை


உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

அஸ்தம் : லாபம் மேம்படும். 

சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------


துலாம்
பிப்ரவரி 06, 2022

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். மனதில் ஒரு விதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.  லாபம் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

சுவாதி : ஆதாயகரமான நாள்.

விசாகம் : குழப்பம் ஏற்படும்.
---------------------------------------


விருச்சிகம்
பிப்ரவரி 06, 2022

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். வியாபாரம் சார்ந்த வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.  உயர்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 


விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும். 

அனுஷம் : நம்பிக்கை மேம்படும். 

கேட்டை : அனுகூலமான நாள்.
---------------------------------------

தனுசு
பிப்ரவரி 06, 2022

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள்.  ஆதரவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்


மூலம் : இன்னல்கள் குறையும். 

பூராடம் : உதவிகள் கிடைக்கும். 

உத்திராடம் : லாபகரமான நாள்.
---------------------------------------


மகரம்
பிப்ரவரி 06, 2022

வேலையில் புதிய மாற்றம் ஏற்படும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பாகப் பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.  சுகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு


உத்திராடம் : மாற்றம் ஏற்படும். 

திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

அவிட்டம் : நெருக்கடிகள் குறையும். 
---------------------------------------


கும்பம்
பிப்ரவரி 06, 2022

பிள்ளைகளால் செல்வாக்கு அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மைகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் கிடைக்கும்.  வரவு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.

சதயம் : புத்துணர்ச்சியான நாள். 

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும். 
---------------------------------------


மீனம்
பிப்ரவரி 06, 2022

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் காணப்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.  செல்வாக்கு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். 

உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 

ரேவதி : அனுகூலமான நாள்.

 

Tags :

Share via