ஜம்மு-காஷ்மீரில் குவியும் தொழில் முதலீடு

by Staff / 18-04-2022 04:56:50pm
ஜம்மு-காஷ்மீரில் குவியும்  தொழில் முதலீடு

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஓராண்டில் 52 ஆயிரத்து 155 கோடி ரூபாய் தொழில் முதலீடு காண முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவு 2019 ஆம் ஆண்டில் ஆகஸ்டு நீக்கப்பட்டதால் அங்கு பிற மாநிலத்தவர் நிலம் வாங்கும் தொழில் தொடங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் பெறப்பட்ட முன்மொழிவுகள் 36 ஆயிரத்து 144 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ஒப்புதல் அளித்த திட்டங்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து எட்டு ஏக்கர் நிலம் கோரியிருந்த நிலையில் 2. 246 ஏக்கர் நிலம் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via