ஆசிரியர் ஆப்பிள் சாகுபடி செய்யும் அரசு பள்ளி ஆசிரியர்

by Staff / 19-04-2022 11:03:39am
 ஆசிரியர் ஆப்பிள் சாகுபடி செய்யும் அரசு பள்ளி ஆசிரியர்

மலைப்பிரதேசங்களில் மட்டுமே  விளைய கூடிய ஆப்பிள்ளை தருமபுரி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறார். பாப்பாரப்பட்டி அருகே திகிலோடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராக தற்காலிகமாக பணி புரிந்து வருகிறார். இவருக்கு விவசாயத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஓசூரில் நர்சரி ஒன்றில் 100 வாட்டர் ஆப்பிள் செடிகளை வாங்கி வந்து தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் வளர்த்துள்ளார். இந்த ஆப்பிள் செடி இரண்டு வருடங்களிலேயே அறுவடைக்கு வந்து விடுவதாகவும் வருடத்தில் மூன்று முறை விளைச்சல் கிடைக்கிறது என்றும் சரவணன் தெரிவித்தார். சிகப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட இரண்டு வகையான வாட்டர் ஆப்பிள் தனது தோட்டத்தில் நடவு செய்து உள்ளதாக தொழுவிக்கும் சரவணன் வருடத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

Tags :

Share via