ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தல் படிவங்களில் அவைத்தலைவர் கையெழுத்திடலாம் 

by Editor / 06-02-2023 08:48:07pm
ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தல் படிவங்களில் அவைத்தலைவர் கையெழுத்திடலாம் 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் வாங்கி வேட்பாளரை தேர்ந்தெடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசவுக்கு மொத்தமுள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில்  2501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். 145 உறுப்பினர்கள் தென்னரசுவுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இந்தநிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பிய ஆவணங்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான கடிதத்தை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via