மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்

by Editor / 03-12-2021 04:33:14pm
மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்து நடுவில் வண்டியை நிறுத்திவிட்டு திடீரென மேலிருந்து கீழே குதித்துள்ளார்.அப்போது பாலத்தின் கீழ் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மணிகண்டன், கீழே விழுந்தவரை உடனடியாக மீட்டுஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இரண்டு கால்களும் முறிந்த நிலையில், முதுகுத்தண்டுவடத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த நபர்  உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
 

 

Tags :

Share via

More stories

Logo