ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

by Staff / 19-04-2022 05:25:26pm
ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர் .நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் அவசரத் தேவைக்கான பிரிவின்கீழ் நில உரிமையாளர்களின் கருத்தைக் கேட்காமலே அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன இதனை எதிர்த்து நில உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நீதிபதி தண்டபாணி இதுநாள்வரை நிலங்களை சுவாதீனம் எடுத்துக் கொள்ளாமலும் நிலத்துக்கான இழப்பீடு வழங்காமல் இருப்பதே பார்க்கும்போதே அவசர தேவைக்காக நிலம் கையகப் படுத்த வில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக கூறி நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via