வீட்டை நகர்த்தி கொடுங்க இல்ல 1.65 கோடி கொடுங்கள் அதிரடி காட்டிய இந்தியர்!

by Editor / 22-05-2021 08:19:43am
வீட்டை நகர்த்தி கொடுங்க இல்ல 1.65 கோடி கொடுங்கள் அதிரடி காட்டிய இந்தியர்!

நியூசிலாந்தில் இந்தியர் ஒருவர் வீட்டை நகர்த்த முடியாமல் திண்டாட்டம். நஷ்டயீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்தர் தீபக் லால் தனது வீடு தவறான இடத்தில் கட்டப்பட்டதால் ஒரு மீட்டர் தூரம் நகர்த்தி தர வேண்டும் அல்லது நியூசிலாந்து டாலரில் 315,000 (இந்திய ரூபாயில் 1.65 கோடி) நஷ்டயீடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். அதாவது லால் கடந்த ஆண்டு, நியூசிலாந்தில் உள்ள பாபகுரா பகுதியில் தனது வீட்டை வடிவமைத்து கட்ட 'பினாகில் ஹோம்ஸ்' என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து, 2020 ஆம் ஆண்டின் பாதியிலேயே வீடு முழுமையாக நிறைவடையும் நிலையில் இருந்தது. இருப்பினும், இந்த நேரத்தில் தான் முழு குழப்பமும் நடந்துள்ளது. அதாவது லாலின் வீடானது பக்கத்து இடத்தில் தவறுதலாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அந்த இடம் சி94 டெவலப்மென்ட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. அவர்கள் வீட்டை சற்று நகரத்தை வேண்டும் இல்லையெனில் நஷ்டஈடு செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது. வடிவமைப்பு கட்டத்தில் செய்யப்பட்ட பிழையின் விளைவாக இந்த பிரச்சினை எழுந்திருக்கலாம் என்று தீபக் லால் தெரிவித்துள்ளார். மேலும் லால் "இது எனக்கு ஒரு கனவு. 'இதை எப்படி தீர்க்கப் போகிறேன்? என்று கூறியுள்ளார். தனது வீட்டை நகர்த்த 80 லட்சம் தேவைப்படும் என்பதால் 1.65 கோடி நஷ்டயீடு கேட்டுள்ளார்.

 

Tags :

Share via