கொரோனாவில் இதுவரை   420 மருத்துவர்கள் இறப்பு   இந்திய மருத்துவர் கூட்டமைப்பு தகவல்

by Editor / 22-05-2021 04:26:15pm
 கொரோனாவில் இதுவரை   420 மருத்துவர்கள் இறப்பு   இந்திய மருத்துவர் கூட்டமைப்பு தகவல்


 

கொரோனா இரண்டாவது அலையில் நோய் தொற்று காரணமாக இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக ஐஎம்ஏ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கொரோனா இரண்டாவது அலையில், கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐஎம்ஏ முன்னாள் தலைவரும், பிரபல மருத்துவருமான கே.கே.அகர்வால், டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் இரண்டாவது அலையில் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்" என ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via