பழைய ஓய்வூதிய பிரச்சனை

by Writer / 12-05-2022 02:57:20pm
 பழைய ஓய்வூதிய பிரச்சனை

அரசு ஊழியர் என்கிற பணியின் சிறப்பே ஓய்வூதியத்தில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.அரைக்காசு உத்யோகமானாலும் அது அரசாங்க உத்யோகமாக இருக்க வேண்டுமென்று அன்றைய பெண் வீட்டார் ,மணமதேர்வு செய்யும்பொழுதுஅவருடைய பணியின் அடிப்படையிலே பெண் கொடுத்தார்கள்.எடுத்தார்கள்இந்த ஓய்வூதிய திட்டமானது ஐரோப்பிய ஒன்றியங்களிலிருந்து தோன்றிய உழைக்கும் அரசுசார் பணியாளர்களின்  நிர்வாகக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்காக உருவாக்கப்பட்டதுஅரசு இயந்திரம் என்றைக்கும் சீராக இயங்குவதற்கானவெகுமதி...ஊழியர்களின் உரிமை.  அரசு ஊழியர் இறப்பு வரை அரசுக்கு விசுவாசமாக இருப்பதற்கானஏற்பாடுஎன்று கூட எடுத்துக்கொள்ளலாம் .நேற்றைய அரசு ஊழியர்தானே என்று அவர்களை சாதாரணமாக  விட்டு விடலாகாது.அரசின் பல திட்டங்ள்,அதன் செயல்பாடுகளை மேற்கொண்டவர்கள் அவர்கள்..ஓய்வூதியமிருந்தால்  என்றைக்கும் அவர்களை பயன்படுத்த,உதவியை.ஆலோசனையை பெற இயலும் .பல  ஆண்டுகளுக்கு மேல் உழைத்து ஓய்வூதியம் இல்லாமல் உங்களிடம் பிடித்த பணம் , ,நாங்கள் கொடுத்த பணம் என்று சொல்லி, பாண்டில் ஓய்வூதியம் கேட்க மாட்டேன் என்று எழுதி வாங்கி ,பணத்தை விடுவித்த பின்,பிறகு , அந்த பணம் , வளர்ந்து நிற்கும் பிள்ளைகளின் படிப்புச்செலவு -கல்யாணசெலவு என கையிலிருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து வருமானமின்றி நிற்கும் அரசாங்க முன்னாள் ஊழியர்களின் நிலை., ஆயிரம் ரூபாய் ௯ட ஓய்வூதியமில்லா 2003 க்கு  பிறகு வேலைக்கு சேர்ந்த அரசு ஊழியா் அவலம்.கொடுமையிலும் கொடுமை... அரசாங்க வேலைக்காக காத்திருந்து நாற்பது-நாறபத்து ஐந்து ஐம்பது வயதிலும் ஐம்பத்து ஐந்து வயதிலும் வேலைக்குச்சேர்ந்தோர் நிலையை,அறியவேண்டியது அவசியம் .90 லிருந்து 95 வரை படித்தோர் வாழ்வில் இருண்ட காலம். அதன்நீட்சியில்..அரசு ஊழியர்களின் எதிர்காலத்தை த்திருடி..ஏப்பமிட்டது போதாதென்று003 க்குப் பிறகு அரசு வேலைசேருகிற. படித்தவனா? ..முதுமையில் பட்டினி கிடந்து சாவு என்று ஓய்வூதிய்த்தையே குழிதோண்டி..புதைத்த அற்புதமான அரசு...போராடுகிறாயா , உள்ளே தூக்கிப்போடு., சம்பளம் பிடி., .இடமாற்றம் செய்,..வழக்குபோடு.. இதுதான்  சமீப காலம் வரை  அரசு  ஊழியர்களுக்கு    எதிரான     அரசின் செயல்பாடுகள்.கலைஞர் தான், அரசு ஊழியர் பிரச்சனைகளை தாயுள்ளத்தோடு பரிசீலித்து அரசு ஊழியர்களுக்கு கெளரவத்தை கொடுத்தவர்.அவரின் வழியில் இயங்கும் தமிழக அரசு அரசு ஊழியர் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த வேண்டும்.

 

Tags :

Share via