12 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு

by Staff / 22-05-2022 01:03:59pm
12 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோய் தொற்று சின்னம்மை போல் இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ளதால் சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டிய உலக சுகாதார அமைப்பு அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தொற்று வேகமாக பரவலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. விலங்குகளிடம்  இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோயாக இது கருதப்படுகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இந்த நோய் பரவி வந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இப்போது அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via