யூ.டியூப்பரை கைது செய்ய வலியுறுத்தி திரண்ட சிவனடியார்கள் திணறிய சிதம்பரம்

by Editor / 23-05-2022 08:09:55pm
யூ.டியூப்பரை கைது செய்ய வலியுறுத்தி திரண்ட சிவனடியார்கள் திணறிய சிதம்பரம்

சிதம்பரம் நடராஜப் பெருமானையும்,தில்லை காளியையும் அவதூறாக பேசிய யூடியூபர் மைனர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள்  சிதம்பரத்தில் குவிந்தனர். சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லைகாளியையும்  அவதூறாக பேசி யூடியூபில் மைனர் விஜய் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து சிவனடியார்கள் ஒன்றிணைப்பு  குழு சார்பில் சிதம்பரத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் சுவாமி சிவ தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என  ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த சிவனடியார்கள் பத்துக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் தங்கியிருந்தனர், சிதம்பரத்தில் எங்கு பார்த்தாலும் சிவனடியார்கள் கூட்டம் அலைமோதியது. நடராஜர் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் குவிந்தும் தேவாரம், திருவாசகம், பாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கணேசன், ஏடிஎஸ்பி அசோக்குமார்,  தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிவனடியார்கள் திடீரென குவிந்ததால் சிதம்பரம் நகரமே காவி உடை போர்த்தியது போன்று காட்சியளித்தது.


 

யூ.டியூப்பரை கைது செய்ய வலியுறுத்தி திரண்ட சிவனடியார்கள் திணறிய சிதம்பரம்
 

Tags : Chidambaram suppresses Sivanadiyars demanding arrest of U. Tupper

Share via