மழை இல்லாத நிலை நீடித்து வருவதால் வறண்ட குற்றாலஅருவிகள்

by Editor / 05-06-2022 09:59:03am
மழை இல்லாத நிலை  நீடித்து வருவதால் வறண்ட குற்றாலஅருவிகள்

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம், ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலமான இந்த காலகட்டத்தில் இங்கு பொழியும் சாரல் மழையும் தென்றல் காற்றிலும் குளித்து நனைய சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 5 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட  அனைத்து  அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு கொட்டத் தொடங்கியது, மேலும் தற்பொழுது விடுமுறை காலம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 10 தினங்களாக தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை இல்லாத நிலை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. குற்றாலம் மெயினருவியில் ஆண்கள் பகுதியில் மட்டுமே கொஞ்சமாய் கொட்டும் அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மழை இல்லாத நிலை நீடித்து வருவதால் அருவிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டு  வருகின்றது.இன்றைய நிலவரப்படி  ஆண்களும்,பெண்களும் ஒரே பகுதியில் காத்திருந்து குளித்து செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குற்றாலம் மெயின் அருவியில்  இதன் காரணமாக நீண்ட வரிசையில் ஒருபுறம் ஆண்களும் மற்றொருபுறம் பெண்களும் திரண்டு நின்ற வண்ணம் உள்ளனர், மேலும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கேரளமாநில சுற்றுலாத்தலங்களை நோக்கி படையெடுத்து சென்றவண்ணமுள்ளனர்.மழை இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம்  என்பதே இங்குள்ள சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

 

Tags : Dry creeks due to prolonged absence of rain

Share via