காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிர்வாகம் அறிக்கை

by Editor / 02-09-2022 10:23:57am
 காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிர்வாகம் அறிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஷேல் கேஸ் மீத்தேன் திட்டங்கள் செயல்படுத்தவில்லை ஓஎன்ஜிசி நிர்வாகம் அறிக்கை வெளியீடுONGC அமெரிக்காவின் CONOCO PHILIPS என்ற நிறுவனத்தோடு இணைந்து SHALE GAS மற்றும் SHALE OIL திட்டங்களை ஆய்வு செய்கிறது என்ற உண்மைக்குப் புறம்பான செய்தி வெளிவருகிறது.அந்த செய்தியை ONGC முற்றிலுமாக மறுக்கிறது. மேலும் இது தொடர்பாக 2017 ம் ஆண்டு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் காவிரி படுகையில் ஷேல் எண்ணை வாயு மற்றும் நிலக்கரி படுக்கை மீத்தேன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று தெளிவு படுத்தி இருக்கிறது.அதனால் பொது மக்கள் இது மாதிரியான அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

 

Tags :

Share via