2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு

by Editor / 08-06-2022 10:37:13am
 2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையம் அருகேயும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வாயில் முன்பும் மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் (எம்.ஆர்.பி) தேர்ச்சி பெற்று கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து பெரும்பாலானசெவிலியர்கள்  தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை போராட்டம் நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து செவிலியர்கள்  போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். இதனால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் தலைமையிலான போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது செவிலியர்கள்  கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து பெண் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை  கைது செய்ய முயன்றனர்.வாக்குவாதம் முற்றிய நிலையில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் மருத்துவர்கள் அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு
 

Tags : Case against 487 nurses in 2 divisions

Share via