டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது 

by Editor / 08-10-2021 05:50:12pm
டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது 


மீண்டும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் விலை மீண்டும் சதமடித்துள்ளது.


சென்னையில்ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101 -ஐ தாண்டியுள்ளது. சென்னையில் வெள்ளி அன்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.101.01 க்கு விற்றது. ஒரு லிட்டர் டீசலின் விலை 34 காசுகள் உயர்ந்து 96.60 ரூபாய்க்கு விற்றது. பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்கி வருவதால் மக்களின் சுமை கூடியுள்ளது. 


மும்பையில் டீசல்விலை லிட்டருக்கு 37 பைசா உயர்ந்து 100-ஐ நெருங்கியது. தற்போது அங்கு பெட்ரோல் விலை ரூ .99.92 ஆக உள்ளது. மும்பையில், பெட்ரோல் விலை, 29 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 109.54 ஆக உள்ளது.

 

Tags :

Share via