வைகாசி விசாக திருவிழா அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு வழிபாடு

by Staff / 12-06-2022 01:35:46pm
வைகாசி விசாக திருவிழா அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தியும்  வழிபட்டு வருகின்றனர். ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழாவில் அதிகாலை 3 மணி முதல் இடைவிடாமல் பால் அபிஷேகம் செய்து பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி இளநீர் காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர் .ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முருகனின் அவதாரம் தின மான நாளாக கருதப்படும் இன்றைய தினம் வழிபாட்டால் ஆண்டு முழுவதும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via