இஸ்ரேல், எகிப்துடன் எரிவாயு ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியம்

by Editor / 20-06-2022 02:21:38pm
இஸ்ரேல், எகிப்துடன் எரிவாயு ஒப்பந்தம்  ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய யூனியனில் சேர விருப்பம் தெரிவித்த உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களை கடந்தும் போர் தொடுத்து வருகிறது. 23 ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருகின்றன.இதனால் ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் நோக்கில் அந்நாடுகளுக்கு விநியோகிக்கும் எரிபொருளுக்கான கட்டணத்தை அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என ரஷ்யா தெரிவித்தது.இதையடுத்து மாற்று ஏற்பாடாக இஸ்ரேல், எகிப்து ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் எரிவாயு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் தனது கிழக்கு கடல் பகுதி வழியாக எகிப்துக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை அனுப்பும், அங்கு அது திரவமாக்கப்பட்டு ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எரிபொருள் மெல்ல மெல்ல குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

 

Tags :

Share via