கேரளாவில் 6 வயது குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை  தென்காசிக்கு அழைத்துவந்து கேரளா போலீசார் விசாரணை.

by Editor / 10-12-2023 11:50:08pm
கேரளாவில் 6 வயது குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை  தென்காசிக்கு அழைத்துவந்து கேரளா போலீசார் விசாரணை.

 கேரள மாநிலம் கொல்லம் மாவட்டபகுதியான ஓயூர் கடந்த 27ஆம் தேதி அன்று  அபிகெல் சாரா தனது சகோதரருடன் டியூசனுக்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று  ஆறு வயது சிறுமியை காரில்  கடத்தி சென்றது, அந்த குழந்தையை கடத்திய கும்பல் ரூபாய் 10 இலட்சம் கேட்டு அவர்களது குடும்பத்தை மிரட்டவே அந்தகுழநதையின் பெற்றோர் கொல்லம் போயப்பள்ளி போலீசில் புகார் செய்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தநிலையில் அந்தக்கும்பல் குழந்தையை  வைத்து 20 மணி நேரத்திற்கு மேலும் காரில் சுற்றியுள்ளனர்.27 ஆம் தேதி கடத்தப்பட்ட குழந்தை இந்த நிலையில் 28ஆம் தேதி அன்று சிறுமி  அபிகெல் சாராவை கொல்லம் அருகே உள்ள  ஆசிரம மைதானத்தில்  விட்டு தப்பி சென்றனர், இந்த நிலையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில்  அபிகெல் சாராவை மைதானத்திற்கு முன்பாக ஆட்டோவில் இறக்கி விடப்பட்ட  ஆட்டோவையும்  போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர், தொடர்ந்து சிசிடிவி காட்சிகளையும் தீவிரமாக போலீசார் ஆய்வு செய்தனர் இந்த நிலையில் குழந்தையை கடத்தியவர்கள் சாத்தனுர் அசெம்பிளி தொகுதியை சேர்ந்த பத்மகுமார் அவரது மனைவி அனுபமா மகள் அனிதா என்பதும் அவர்கள் காரில்  தப்பி தமிழகத்திற்கு வந்ததும் தெரியவரவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களது செல்போன் அலைவரிசையை வைத்து அவர்கள் தென்காசி மாவட்டத்தில் இருப்பது தெரியவரவே கொல்லம் மாவட்ட போலீசார் கடந்த 1.12.2023 அன்று தமிழககேரள எல்லையான புளியரை சவுக்கை என்றபகுதியிலுள்ள உணவகத்தில் சாப்பிட காரில் வந்து காத்திருந்தவர்களை கேரளா போலீசார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் தென்காசியில் தங்கியிருந்த பிரபல கிருஷ்ணா டூரிஸ்ட் ஹாமில் கொல்லம் டி.எஸ்.பி.ஜோஸ் தலைமையில் ஆய்வாளர் பிஜு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பத்மகுமார் அவரது மனைவி அனுபமா மகள் அனிதா ஆகியோரை அழைத்து வந்துசுமார் 1மணிநேரமாக விசாரணை மேற்கொண்டனர்.

 

Tags : கேரளாவில் 6 வயது குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை  தென்காசிக்கு அழைத்துவந்து கேரளா போலீசார் விசாரணை.

Share via