பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகளை சேர்க்க 50 கோடி ரூபாய் பழைய தங்க நகைகள் விற்பனை

by Editor / 22-06-2022 08:41:58am
பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகளை சேர்க்க  50 கோடி ரூபாய் பழைய தங்க நகைகள்  விற்பனை

தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகள் தரப்பு மற்றும் சேர்க்கைகளும் தீவிரமாக நடந்துவருகின்ற்றன.இந்த நிலையில் பள்ளி,கல்லூரிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கொரோனோ பெருந்தொற்றுக்குப்பின்னர் பள்ளி,கல்லூரிகளில் சேர்ப்பதற்காக கடும் பொருளாதார நெருக்கடியை மீண்டும் சந்திக்கத்தொடங்கியுள்ளனர்.

கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகி கூறியதாவது:
ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் அந்த பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், கொரொனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.

இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக, பெற்றோர் தாங்கள் சேமித்து வைத்த தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய தங்க நகை விற்பனை நடைபெற்றுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், எதிர்வரும் நாட்களிலும் கூடுதலாக பழைய தங்க நகைகள் விற்பனை செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மந்தமான பொருளாதார சூழல் என பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், பொதுமக்கள் முந்தைய காலங்களில் தங்கள் சேமிப்பு பணத்தை வைத்து தங்க நகைகளை வாங்குவதற்கு முதலீடு செய்த காரணத்தால், இன்று அவர்களுக்கு அந்த தங்க நகைகள் தற்போதுள்ள நெருக்கடியான நிதி நிலையை எதிர்கொள்ள பெரிதும் உதவி வருதிறது.

எனவே, தங்கத்தில் முதலீடு செய்தால் எதிர்வரும் காலங்களிலும் பெரிய அளவு நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்பதற்கு இன்றைய சூழ்நிலையே சிறந்த சான்றாகும்.

 

Tags : 50 crore sale of old gold jewelery to enroll children in schools and colleges

Share via