பிரபல நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு!

by Editor / 29-05-2021 07:59:46am
பிரபல நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 31,079பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20லட்சத்து 09ஆயிரத்து 700ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 486 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,775ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் அதிகமாகி இருப்பதால் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒருவாரம் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். டிவி தொடரில் நடித்து வந்த வெங்கட் சுபா, டூரிங் டாக்கிஸ் என்ற யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வந்தார். தயாரிப்பாளராக இருந்த இவர் மொழி, கண்ட நாள் முதல், அழகிய தீயே உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

 

Tags :

Share via