இன்ஸ்டாகிராமில் இனி வயதை மாற்றி சொல்லி ஏமாற்ற முடியாது - வந்தாச்சு புது அம்சம்

by Editor / 25-06-2022 01:08:57pm
இன்ஸ்டாகிராமில் இனி வயதை மாற்றி சொல்லி ஏமாற்ற முடியாது - வந்தாச்சு புது அம்சம்

பயனர்கள் தங்களின் செல்பி வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டுமாம். பயனர்களின் வயதை கணக்கிட்டு அதற்கேற்றார்போல் அவர்களுக்கு தேவையான கண்டெண்ட்டுகளை காண்பிக்க திட்டமிட்டுள்ளது. முன்னணி சமூக வலைதளமாக திகழும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இலவசமாக பதிவிறக்கம் செய்து, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றிருப்பது சில சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. ஏனெனில் இதில் வரும் 18+ பதிவுகளை அனைவரும் பார்க்கக்கூடிய சூழல்களும் இருக்கின்றன. குறிப்பாக சிறுவர்களுக்கு இது ஆபத்தாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த விரைவில் புதிய அம்சம் ஒன்றை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது. Yoti என்ற தொழில்நுட்பம் மூலம் பயனர்களின் வயதை கணக்கிட்டு அதற்கேற்றார்போல் அவர்களுக்கு தேவையான கண்டெண்ட்டுகளை காண்பிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பயனர்கள் தங்களின் செல்பி வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டுமாம். யோடி தொழில்நுட்பம் மூலம் அந்த வீடியோவில் உள்ள பயனர்களின் வயதை கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல் வீடியோக்களை காண்பிக்கும் என கூறப்படுகிறது. வயதை சரிபார்த்த உடன் அது தொடர்பான வீடியோ மெட்டா மற்றும் யோடி தொழில்நுட்பத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

 

Tags :

Share via