சசிகலாவின் பயணம் அ.தி.மு.க தொண்டர்களை வசப்படுத்துமா..

by Admin / 27-06-2022 01:03:54pm
சசிகலாவின் பயணம் அ.தி.மு.க தொண்டர்களை வசப்படுத்துமா..


சசிகலா சிறையிலிருந்து வந்ததிலிருந்தே அ.தி.மு.கவிற்குள் ஒரு சல சலப்பு உருவாயிற்று.அதை யாரும்மறுக்க முடியாது.காரணம் ,ஜெ யலலிதா இருந்த பொழுதே  பலரின் அரசியல் அதிகார பலம் .சசிகலாமூலம்வழங்கப்பட்டது ... ெஜ.மறைவிற்கு பின். சசிகலா சிறையிலிருந்த காலத்திலிருந்து இன்று வரைதானே ..ராஜா..தானே மந்திரி என்கிற கதையாக ஒவ்வொரு அ.தி.மு.க தலைமை  நிர்வாகிகள்,அமைச்சர்கள்சுதந்திரமாக..படு..சுதந்திரமாக இயங்கி வந்தனர்.கேள்வி கேட்பதற்கும் கண்டிப்பதற்கும் யாருமில்லா கட்டுப்பாடில்லாசுதந்திரத்தை அனுபவித்தனர்.அனுபவித்து  வருகின்றனர்.இந்நிலையில் சசிகலா விடுதலை ஆனதிலிருந்து ஒ.பி.எஸ்சசிகலாவிற்கு ஆதரவாக பேசுவதும் செயல்படுவதுமாக உள்ளார் என்கிற கருத்து உருவாயிற்று..அதனால்,மீண்டும்
ஒ.பி.எஸ். சசிகலாவோடு சேர்ந்தால்...மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை. கூடாது என்கிற எண்ணம்கட்சியின் மூத்த தலைவர்களுக்குள் எழ ஆரம்பித்தது. அதன் விளைவு நம்மை அனுசரித்து வழி நடத்துகிற ..நம்மலில்ஒருவர் எனும் கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டு ..ஈ.பி.எஸ்  என்கிற ஒற்றைத் தலைமை  கோரிக்கை  வலுப்பெற்று  அதற்கான  முனைப்பு தான்   சமீபகால  செயல்பாடுகள் .நான்காண்டு கால அதிகாரப்பலத்தை கொண்டு b கட்சிக்குள்ளிருக்கும்    நிர்வாகிகளை  சுதந்திரம்...சமத்துவம்..என்கிற அடப்படையில் ஈ.பி.எஸ் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகச்சொல்லப்படுகிற நிலையில்,ஆட்சி,அதிகாரமற்று, பழைய செல்வாக்கை மட்டுமே கொண்டு சசிகலா எப்படிக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளைத் தன் வசப்படுத்த முடியுமென்கிற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு தொண்டனுக்குள்ளும்  ஓரு பதவி ஆசையிருக்கும் அதை  இன்று கட்சிக்குள்  இருப்பவர்களால்  வழங்க முடியும்.கட்சியில்  இல்லாத சசிகலாவால் எப்படி வழங்க முடியும்.பணமும் அதிகாரமும் எதிரணியில் இருக்கையில் அவரது பயணம் நாளை
இயக்கம் என் வசப்படும் என்று சொல்வதை  இன்றைய கட்சியின் அடிமட்ட தொண்டன் ஏற்கும் மன நிலையைப்பொறுத்தே சசிகலா பயணத்தின் வெற்றி..அதற்குள் இன்றைக்கு அதிகாரத்தை வைத்திருப்போர் பக்கம்  சாய்ந்து விட்டால். ..ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக குரல்  ஒங்கி ஒலிக்க செய்தவர்கள் சசிகலாவால் பலிவாங்கப்பட் ட பட்டியலில்  இருந்தவர்கள் என்கிற செய்தியும் வருகிறது.

 

Tags :

Share via