காணாமல் போன தமிழின் முதல் பைபிள் இலண்டனில் கண்டுபிடிப்பு..?

by Editor / 01-07-2022 09:45:22pm
காணாமல் போன தமிழின் முதல் பைபிள் இலண்டனில் கண்டுபிடிப்பு..?

தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து வடக்கு நோக்கி 13 கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த ஊர் தரங்கம்பாடி.டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ தூதரான பார்தோலோமஸ் ஸிகன்பால்க் என்பவர் 1706 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தரங்கம்பாடி பகுதிக்கு வந்தார்.

இந்தியாவிலேயே இங்குதான் முதல் பத்திரிக்கை அச்சகம் 1714 இல் டேனீஷாரால் நிறுவப்பட்டு தமிழ் மொழியில் புதிய ஆய்வுகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.இதையடுத்து 1715 ஆம் ஆண்டு பைபிளில் உள்ள புதிய ஏற்பாடு என்ற பகுதியை தமிழில் மொழி பெயர்த்தார். இதுவே தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல்  கிறிஸ்துவ புத்தகமாகும்.

இந்தப் பைபிளை தான் சார்வட்ஸ் என்ற மற்றொரு கிறிஸ்துவ தூதர், தஞ்சாவூர் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்த செர்ஃபோஜி மன்னரிடம் கொடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து சுதந்திரம் அடைந்த பிறகு தமிழக அரசு இந்த பைபிளை தஞ்சாவூரின் சரஸ்வதி மாளிகை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைத்தது.

பல ஆண்டுகள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த  இந்த பைபிள், கடந்த 2005 ஆண்டு காணாமல் போனது. பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் அரசர் வைத்துள்ள பொருட்களின் படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் தமிழ்நாட்டில் காணாமல் போன பைபிள் போன்ற ஒரு புத்தகம் இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தமிழ்நாட்டு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர்  கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து வடக்கு நோக்கி 13 கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த ஊர் தரங்கம்பாடி.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ தூதரான பார்தோலோமஸ் ஸிகன்பால்க் என்பவர் 1706 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தரங்கம்பாடி பகுதிக்கு வந்தார்.

இந்தியாவிலேயே இங்குதான் முதல் பத்திரிக்கை அச்சகம் 1714 இல் டேனீஷாரால் நிறுவப்பட்டு தமிழ் மொழியில் புதிய ஆய்வுகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.இதையடுத்து 1715 ஆம் ஆண்டு பைபிளில் உள்ள புதிய ஏற்பாடு என்ற பகுதியை தமிழில் மொழி பெயர்த்தார். இதுவே தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல்  கிறிஸ்துவ புத்தகமாகும்.

இந்தப் பைபிளை தான் சார்வட்ஸ் என்ற மற்றொரு கிறிஸ்துவ தூதர், தஞ்சாவூர் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்த செர்ஃபோஜி மன்னரிடம் கொடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து சுதந்திரம் அடைந்த பிறகு தமிழக அரசு இந்த பைபிளை தஞ்சாவூரின் சரஸ்வதி மாளிகை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைத்தது.

பல ஆண்டுகள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த  இந்த பைபிள், கடந்த 2005 ஆண்டு காணாமல் போனது. பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் அரசர் வைத்துள்ள பொருட்களின் படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் தமிழ்நாட்டில் காணாமல் போன பைபிள் போன்ற ஒரு புத்தகம் இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தமிழ்நாட்டு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர்  கண்டுபிடித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : The first missing Tamil Bible found in London ..?

Share via

More stories