தனியார் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

by Editor / 02-07-2022 05:56:54pm
தனியார் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

கடந்த 2017 ஆம் ஆண்டு கமர்சியல் ஷோரூம் கட்டுவதற்காக என்று கூறி இந்தியன் வங்கியில் இருந்துபிரபல தனியார் நிறுவனம் சார்பில் முதலில் 150 கோடி ரூபாயும்பின்னர் 90 கோடி ரூபாயும் கடனாக பெறப்பட்டதாகவும், அதேபோல அடுத்த ஆண்டும் 90 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளதாகவும், ஆனால் அந்த கடனை சொன்ன காரணங்களுக்கு பயன்படுத்தாமலும், கடனை அடைக்காமலும் அந்த பணத்தை வேறு விவகாரங்களில் முதலீடு செய்துள்ளதாக இந்தியன் வங்கி தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.இது தொடர்பாக இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி கே.எஸ் குப்தா சி.பி.ஐ-யிடம் புகார் அளித்திருந்தார். இந்த முறைகேட்டால் தங்களுக்கு 312 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இந்தியன் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.புகாரின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின், பங்குதாரர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சில அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கருதி அமலாக்கத் துறை சார்பில் இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நிறுவனத்தின் 234.75 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

 

Tags :

Share via