கடல் சீற்றம் அழிக்கால் கிராமத்தில் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

by Editor / 02-07-2022 11:10:23pm
கடல் சீற்றம்  அழிக்கால் கிராமத்தில் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

குமரி மாவட்டம் மிக நீளமான கடற்கரை பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இந்த கடற்கரை பகுதிகளில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். இந்த மாதங்களில் பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி ஆக்ரோஷத்துடன் வருவது வழக்கம். அவ்வாறு வரும் அலைகள் கரையோரத்தில் உள்ள மீனவ மக்களின் வீடுகளுக்குள் புகுந்து விடுவதும் உண்டு. இதில் வெள்ளிச்சந்தை அருகே உள்ள அழிக்கால் கிராமம் பெரும் சேதத்தை சந்திக்கிறது.அழிக்கால் கிராமத்தில் கடல் சீற்றத்தால் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான கடற்கரைப் பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை இரவு 11.30 மணி வரைக்கும் 3.0 - 3.6மீ உயரம் வரை அலையின் சீற்றம் இருக்கும் என ESSO_INCOIS எச்சரித்துள்ளது.

 

Tags : 50 houses in the village were inundated by the raging sea.

Share via