போலி நகையை விற்று 5 லட்சத்தை ஆட்டையை போட்ட வட மாநில கொள்ளையர்கள்

by Editor / 03-07-2022 09:20:38am
போலி நகையை விற்று 5 லட்சத்தை ஆட்டையை போட்ட வட மாநில கொள்ளையர்கள்

திருப்பூர் மாவட்டம் மண்ணரை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் பாலு. அவரது ஹோட்டலுக்கு சாப்பிட வந்த வடமாநில இளைஞர் ஒருவர் பாலுவிடம் தன் பெயர் ரோகித் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். தான் மேம்பால பணிகள் செய்து வருவதாகவும், அப்பணிகளுக்காக குழி தோண்டிய போது ஒரு பானையில் தங்கம், பழங்கால நாணயம் கிடைத்ததாகவும் கூறி விக்டோரியா மகாராணி படம் பதித்த நாணயம், தங்க காசு மாலையையும் காண்பித்திருக்கின்றார். 80 லட்சம் மதிப்பிலான இதை குறைந்த விலையில் விற்கபோவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் அது தங்கமா இல்லையா என்பதனை அறிந்துகொள்ள ஒரு பகுதியினை கழட்டி பாலுவிடம் தந்திருக்கின்றார். தங்க நகை கடையில் உரசி பார்த்தபோது அது தங்கமென பாலுவிடம் கடைக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர். பின் விலை குறித்து பாலு கேட்டபோது கோயமுத்தூருக்கு வடமாநில இளைஞன் சென்றுவிட்டதாகவும் தங்கம் வேண்டுமென்றால் கோயமுத்தூருக்கு வருமாறு தெரிவித்திருக்கின்றார். 80 லட்சம் மதிப்பிலான எடை அளவு கொண்ட ஆபரணம் 5 லட்சத்துக்கு தருவதாக தெரிவித்ததால், கோவைக்கு 5 லட்சம் பணத்துடன் சென்று தங்கத்தை வாங்கியுள்ளார். கடந்த 28ம் தேதி அதனை சோதனை செய்து பார்த்தபோது, போலியான தங்கத்தை கொடுத்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Northern state robbers who sold fake jewelry and pocketed 5 lakhs

Share via