இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார்9.ம் தேதி கல்லூரி திறப்பு விழா புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

by Editor / 05-07-2022 12:11:40pm
இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார்9.ம் தேதி கல்லூரி திறப்பு விழா  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார்.
இதற்காக வரும் 8-ம் தேதி சென்னையிலிருந்து புறப்படும் அவர் செங்கல்பட்டு மாவட்டம் வழியாக சென்று, கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.பின்னர் திருவண்ணாமலை செல்லும் முதலமைச்சர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகளை வழங்குகிறார்.அதைத்தொடர்ந்து, 9-ம் தேதி காலை மருத்துவ கல்லூரி திறப்பு விழா உட்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

 

Tags :

Share via