சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 05-07-2022 12:56:44pm
சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் புகழ்பெற்ற  கல்லூரிகளில்  முதன்மை இடத்தை   பிடித்திருக்கும்   சென்னை மாநிலக்கல்லூரியில் இன்று பட்டமளிப்பு  விழா நடைபெற்று  வருகிறது  பட்டமளிப்பு விழா  சிறப்புரையாற்றிய  முதலமைச்சர்,சென்னை மாகாணத்திலே  முதலாவதாகத்தோன்றிய கல்லூரி .1840   தொடங்கப்பட்ட   இக்கல்லூரி   சென்னைப் பலகலைக்கழகம்  தொடங்குவதற்கு 14 ஆண்டுகளுக்கு  முன்பே தொடங்கப்பட்டது.சென்னைப்பல்கலைக்கழகத்திற்கே தாய் போன்றது.182 ஆண்டுகால  வரலாறு  உடைய  கல்லூரி .இக்கல்லூரியில் தான்  திராவிட இயக்கத் தலைவர்களான  சர்.பிட்டி  தியாகராயர்  ,நாயர்  போன்றவர்கள்   நோபல் பரிசு  பெற்ற சர்.சி.வி.ராமன்.சந்திரசேகர் ,மூதறிஞர்  ராஜாஜி  போன்றவர்கள் பயின்ற கல்லூரி .26 துறைகளுடன் 4,467  மாணவர்கள்  படிக்கும்   கல்லூரி .  சென்னைப்   பல்கலைக் கழகத்தில்    அதிகம்முனைவர் பட்டம் பெறும்  மாணவர்கள் கொண்ட கல்லலூரி  என்றும்  முதல் தலைமுறை பட்டதாரிகள், விளிம்பு நிலை, ஒடுக்கப்பட்ட,  புறநகர் மாணவர்கள்  அதிகம்  பயிலும்  சமூகநீதி கல்லூரியாக  விளங்கிக் கொண்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் 304பேர், செவி திறன் குறைபாடுடைய 200 க்கு மேற்பட்டவர்கள் பி.காம்.பி.சி.ஏ  படிக்கும்  கல்லூரி   .2007  இல்  கலைஞரால்    மாற்றுத்  திறனாளிகள்   படிப்பதறகான      வகுப்புகள்      மாநிலத்திலே              முதலாவதாகத் தொடங்கபெற்றன  .இப்பொழுது   எம்.காம்  வகுப்பு  தொடங்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளது .மாநிலக்கல்லூரி   மனித  நேயக் கல்லூரியாக  செயல்படுகிறது  என்றும்   நான்  படித்த    இந்த கல்லூரிக்கு  இரண்டு அறிவிப்பு செய்வதாகவும்   அதன்படி 2000 போ்  இருக்கக்கூடிய   கலைஞர்  பெயரில் அரங்கமும் கல்லூரி  வளாகத்திலே  மாற்றுத் திறனாளிக்கு   விடுதியும்   கட்டித்தருவதாக   அறிவித்தார்.
 

Tags :

Share via