உலக மக்கள் தொகை சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா
உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுகிறது என ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. உலகில் மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை 2023ம் ஆண்டில் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐ.நா.கணித்துள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது.சிசு மரணம், குழந்தை இறப்பு விகிதமும் குறைந்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரஸ் குறிப்பிட்டுள்ளார்.
Tags : India overtakes China in world population