சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர்... யோகா குரு ராம்தேவ்

by Staff / 17-10-2022 11:59:55am
சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர்... யோகா குரு ராம்தேவ்

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரிலான இதில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். நடிகர் ஆமீர் கானை பற்றி எனக்கு தெரியாது. நடிகர் ஷாருக் கானின் குழந்தை கூட போதை பொருள் பயன்படுத்தும்போது பிடிபட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். நடிகைகளை எடுத்து கொண்டால், கடவுளுக்கு மட்டுமே அவர்களை பற்றி தெரியும் என கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். திரை துறை முழுவதும் போதை பொருள் விளையாடுகிறது. அரசியலிலும் கூட போதை பொருட்கள் உள்ளன என்றார்.

 

Tags :

Share via