121-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை

by Editor / 19-09-2022 08:09:44am
 121-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி அதே விலையில் விற்பனையாகிறது. தொடர்ந்து 121-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

 

Tags :

Share via