சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலைதிறக்கப்படுகிறது. 

by Editor / 16-09-2022 12:28:54am
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  இன்று மாலைதிறக்கப்படுகிறது. 

சபரிமலை  ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று 16-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21-ம் தேதி வரை 5 நாள்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாள்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணியளவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு  நடை திறக்கப்பட்டு தீபாராதனை அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும். 


 

 

Tags :

Share via