மதுரை பல்கலைக்கழகப்பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு- க.பொன் முடி

by Admin / 12-07-2022 02:26:23pm
மதுரை பல்கலைக்கழகப்பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு- க.பொன் முடி


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ,நடைபெறவுள்ள  பட்டமளிப்பு  விழாவை  தமிழக அரசை ஆலோசிக்காமல்    அறிவிப்பு  வெளியாகியுள்ள  காரணத்தால்   பட்டமளிப்பு   விழாவை  புறக்கணிப்பதாக  உயர்கல்வித்துறைஅமைச்சர் க.பொன் முடி தெரிவித்தார்.ஆளுனர் பா.ஜ.க அரசியலை  பல்கலைக்கழகங்களில் புகுத்துகிறார் என்றும் அ ழைப்பிதழில்  இணைவேந்தர்  பெயர் இடம் பெற வேண்டிய  இடத்தில் அச்சிடப்படாமல் சிறப்பு  விருந்தினரான  மத்திய இணையமைச்சர்  பெயர்  உள்ளது.பல்கலைக்கழக  பட்டமளிப்பு   மரபு படி ஒருத்தர்   தான்  சிறப்பு  விருந்தினராக  பங்கேற்க வேண்டும் . ஆனால், இரண்டு பேர்   அழைக்கப்பட்டிருக்கிறார்கள் .பல்கலைக்கழகங்ககளில்  வேந்தர் வைத்து பட்டமளிப்பு  நடத்துவது ஆங்கிலேயர் கால நடைமுறை.ஆளுனர் இல்லாத  பொழுது  உயர்கல்வி  அமைச்சர்  இணைவேந்தர்  என்கிற முறையில்  பட்டமளிப்பில் கலந்து கொள்வார்.கல்லூரிகளில் நடக்கும் நடக்கும் பட்டமளிப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via