ஜூலை 16 உலக பாம்புகள் தினம்

by Editor / 16-07-2022 08:38:27am
ஜூலை 16 உலக பாம்புகள் தினம்

உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. இவைகளில் 250 இனங்கள் மட்டுமே விஷம் உள்ளவை. இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே விஷம் உடையவை.பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. உட்புறக் காதுகள் உண்டு. இதன்மூலம் சுற்றியுள்ள அதிர்வுகளை உணர முடியும். பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாததால் கால்களை இழந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மலைப்பாம்புகளின்ஆசனவாய் அருகில் இருக்கும் இரண்டு நகங்களை வைத்து பாம்புகளுக்கு கால்கள் இருந்ததை உறுதி செய்ய முடிகிறது. பாம்புகள் நாக்கை வெளியில் நீட்டி சுற்றுப்புறத்தை உணர்கின்றன. பார்படாஸ் திரட் என்ற பாம்பு உலகிலேயே மிகச்சிறியது. 10 செ.மீ. அளவில்தான் இருக்கும். ரெட்டிகுலேட்டடு பைத்தான் என அறியப்படும் ராஜ மலைப்பாம்பு உலகிலேயே மிக நீளாமானது. 30 அடி நீளம் வரை வளரும். இம்மலைப்பாம்பு இந்தியாவிலும்உள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள பச்சை அனகோண்டாஉலகிலேயே மிகப்பெரிய பாம்பு. 100 கிலோ வரை எடை இருக்கும். கூடுகட்டி முட்டையிட்டு அடை காப்பது ராஜநாகம் மட்டுமே. இவை மூங்கில், ஈத்தல் புற்களைக் கொண்டு கூடுகள் அமைக்கும். இனப்பெருக்கக் காலத்தில் ஆக்ரோஷமாக காணப்படும். இதன் உணவு பாம்புகள் மட்டுமே. சாரைப்பாம்பை விரும்பி உண்ணும்.ராஜநாகம் நம் நாட்டின் தேசிய ஊர்வன விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்புகள் வளர்ச்சி அடையும் காலங்களில் தனது தோலை உறித்துக் கொள்ளும். இவற்றை 'பாம்பு சட்டை' என அழைப்பர்.

 

Tags :

Share via