இந்த நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

by Editor / 28-07-2022 09:48:54pm
இந்த நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

இந்நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள் எனவும் பிரதமரின் வருகையால் இந்த விழா பெருமை அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுமார் 100 ஆண்டுக் கால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த பெருமைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக 44வது செஸ் ஒலிம்பியாட்டின் பிரம்மாண்ட தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார பெருமைகளைப் பறைசாற்றும், வகையில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.


மேலும், சங்க காலம் தொடங்கி தற்போது வரை உள்ள தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளைக் கூறும் பதிவுகள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரலாறுகள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியப் பெருமைகள், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, சிலம்பத்தின் விளக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில், காணொலிகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் இடம்பெற்றிருந்தன. அவை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சர்வதேச நாட்டவர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை,உலகின் பல நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன்.நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடைபெற்றுள்ளது.

குஜராத் பிரதமராக இருந்தபோது 20,000 வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி,இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது.பிரதமர் மோடியை அழைக்க டெல்லி செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன்,கொரோனா தொற்றால் என்னால் நேரில் சென்று அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்; நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்தது 18 மாதங்கள் ஆகும்,வெறும் நான்கே மாதங்களில் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது.

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை மட்டுமின்றி சுற்றுலா துறையும் மிகப்பெரிய வளர்ச்சியடையும்,"பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும்; 

இந்த நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள், சர்வதேச அளவில் தமிழ்நாடு கவனம் பெற்றிருக்கிறது". மொத்தம் 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்,தமிழ்நாடு தான் செஸ் தலைநகரமாக உள்ளது.

தம்பி என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது; நாமெல்லாம் ஒரே குடும்பம் என்பதை குறிப்பிடுகிறது.பேரறிஞர் அண்ணா அவரின் தொண்டர்களை தம்பி என்றே அன்போடு அழைப்பார்.- முதல்வர் ஸ்டாலின்.

 

Tags : This day is a proud day for India- Chief Minister M.K.Stalin

Share via