பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்ச ரூபாய் உயர்வு

by Editor / 10-08-2022 01:19:29pm
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்ச ரூபாய் உயர்வு

மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்ச ரூபாய் அதிகரித்து 2 கோடியே 23 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் வரையிலான மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மோடிக்கு சொந்தமான அசையும் சொத்துக்களின் மதிப்பு கடந்த நிதி ஆண்டை விட 26 லட்சம் 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. காந்திநகரில் தனக்கு சொந்தமான ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்ததாகவும் அரசு நிதி பத்திரங்கள் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via