ரேசன் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும் -தமிழக அரசு

by Editor / 07-06-2021 08:33:30pm
ரேசன் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும் -தமிழக அரசு

 

தமிழகத்தில் ரேசன் கடைகளானது,காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,மேலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும்,இதுகுறித்து தமிழக அரசு,அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில்,

  • காய்கறிகள்,மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6-00 மணி முதல் மாலை 5-00 மணி வரை செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • இச்சூழலில் நியாய விலைக் கடைகள் கீழக்காணும் பணி நேரத்தின்படி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
  • எனவே 08.06.2021 முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 09.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும், இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்
  • அரசு செய்தி வெளியீட்டின்படி கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000/- மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை 15/06/2021 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை 11/06/2021 முதல் 14/06/2021 முடிய கடைப்பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.
  • 11/06/2021 முதல் 14.06.2021 முடிய முற்பகல் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பண்டங்களை வழக்கம் போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
 

Tags :

Share via